ஆனி அமாவாசை: நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் குலதெய்வ வழிபாடு.. நோய் பாதிப்பை தடுக்கும் பித்ருக்கள் | Aani Amavasai : Worship of the deity to increase immunity

News

oi-Jeyalakshmi C

|

சென்னை: தற்போது உலகம் முழுவதும் புது புது நோய்கள் பரவி வருகின்றன. உடம்பில் நோய் பாதிப்பு குறைந்து நோய் எதிர்ப்பாற்றல் பெற குல தெய்வ வழிபாடு அவசியம். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். அமாவாசை நாட்களில் பித்ரு வழிபாடு எனும் முன்னோருக்கு செய்யும் திதிகளை சரியாக செய்தாலே நோய்கள் பாதிப்பு ஏற்படாது என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனி மாத அமாவாசை நாளைய தினம் முழுநாள் உள்ளது. இந்த அமாவாசை திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழ்வது சிறப்பு. மிதுன ராசியில் சூரியன், புதன் அமர்ந்திருக்க சந்திரனும் இணைந்து பயணம் செய்கிறார். இந்த நாளில் முன்னோர் வழிபாடு செய்வது அவசியம்.

பிரதமர் மோடி அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு- 7 பேர் புதுமுகங்கள் பிரதமர் மோடி அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு- 7 பேர் புதுமுகங்கள்

நவகிரகங்களும் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களை கட்டுப்படுத்துகின்றன. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களும் லக்கினங்களில் பிறந்தவர்களும் நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். ராகு கேது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் மனித உடம்பின் பாகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. எந்த கிரகம் பாதிக்கப்படுகிறதோ அந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உடலின் பாகம் பாதிக்கப்படும்.

நவ கிரகங்களும் நோய்களும்

நவ கிரகங்களும் நோய்களும்

தலை, இருதயம் சூரியனின் கட்டுப்பாட்டிலும், முகம், தொண்டை சந்திரன் கட்டுப்பாட்டிலும், கைகள், தோள்கள் செவ்வாயின் கட்டுப்பாட்டிலும், மார்பு புதன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. வயிறு, உடல் தோல் பாகம் குருவின் ஆதிக்கத்திலும் அடிவயிறு, பிறப்பு உறுப்பு சுக்கிரன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. அதே போல தொடை, கால்,பாதம் சனியின் ஆதிக்கத்தின் கீழும் வரும். இராகு, கேதுக்கள் நிழல் கிரகம் என்பதால் மனித உடலில் இடம் கொடுக்கப்படவில்லை.

நோய் தீருமா

நோய் தீருமா

ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஆறாம் இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். ஒருவருக்கு எப்படிப்பட்ட நோய் வரும், அந்த நோய் எளிதில் தீருமா, அல்லது கடனாளி ஆக்கி விடுமா என்று ஆறாமிடத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நவகிரகங்களில் எந்த கிரகம் பாதிக்கப்பட்டால் என்ன நோய் வரும் என்று பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்தால் நோய்களில் இருந்து குணமடையலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

ஜாதகத்தில் 6 ஆம் பாவாதிபதியுடன் எந்த கிரகம் சேர்க்கை பெற்று இருந்தாலும் அந்த கிரகத்திற்குரிய நோய்கள் வரக்கூடும். ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நவகிரக வழிபாடு அவசியம். முக்கியமாக குரு, சூரியனை வழிபட வேண்டும். உடல் கட்டமைப்பு மற்றும் எலும்பின் காரகர் சனி பகவான் ஆவார். அவர் நல்ல நிலையில் ஜாதகத்தில் இருந்தாலே நோய்கள் எட்டிப்பார்க்காது.

மேஷம், ரிஷபம்

மேஷம், ரிஷபம்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரகதத்துடன், நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும். ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

நோய் கட்டுக்குள் வரும்

நோய் கட்டுக்குள் வரும்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய ஜாதி சிகப்பு பவளத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும். கடக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவிற்குரிய கனக புஷப ராகத்தை நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

நீலக்கல் மோதிரம்

நீலக்கல் மோதிரம்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும். கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

பவள மோதிரம்

பவள மோதிரம்

துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவுக்கு உரிய கனக புஷபராகத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும். விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய சிகப்பு பவளத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

தனுசு மகரம்

தனுசு மகரம்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன்; இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும். மகர லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரகத கற்களை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

கும்பம் மீனம்

கும்பம் மீனம்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சந்திரனுக்குரிய ஜாதி முத்து மோதிரத்தை இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும். மீன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சூரியனுக்குரிய மாணிக்கத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

பித்ரு வழிபாடு

பித்ரு வழிபாடு

உடம்பில் நோய் பாதிப்பு குறைந்து நோய் எதிர்ப்பாற்றல் பெற குல தெய்வ வழிபாடு அவசியம். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். அமாவாசை நாட்களில் பித்ரு வழிபாடு எனும் முன்னோருக்கு செய்யும் திதிகளை சரியாக செய்தாலே நோய்கள் பாதிப்பு ஏற்படாது.

தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வதும். சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

பித்ரு வழிபாடு

பித்ரு வழிபாடு

ஆனி அமாவாசை திருவாதிரை நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் இந்த நாளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். நம் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் காகத்திற்கு சாதம் வைப்பதும் நோய் பாதிப்பை தடுக்கும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களை போக்கி மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.

English summary

New diseases are now spreading around the world. Worship of the caste deity is necessary to reduce the risk of disease in the body and to get immunity. Going to the Kula Deva temple and worshiping will cause better immunity. It has been said in astrology that diseases can not be cured by doing the ancestral rites of Pitru worship during the new moon.

Story first published: Thursday, July 8, 2021, 11:22 [IST]

Source link

Leave a Reply