ஆனி கிருத்திகை: புத்திர பாக்கியம் தரும் சொந்த வீடு யோகம் தரும் தமிழ் கடவுள் முருகன் வழிபாடு | Aani Krithigai: Worship of Tamil Kadavul Lord Murugan who gives yogam to one’s own home

Astrology

oi-Jeyalakshmi C

|

சென்னை: ஆனி கிருத்திகை நாளில் முருகன் வழிபாடு மேற்கொள்பவர்களுக்கு சொந்த வீடு அமையும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு மனம் குளிரும் வகையில் நல்ல செய்தி தேடி வரும். வேண்டிய வரங்கள் எல்லாம் வேண்டியபடியே உடனே கிடைக்கும். இன்றைய தினம் ஆனி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணியில் குவிந்த பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு முருகப்பெருமானை வணங்கினர்.

கார்த்திகேயனுக்கு உகந்த நட்சத்திரம் கார்த்திகை. வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் மகா கிருத்திகை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை ஆகிய மூன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும் செவ்வாய்கிழமையுடன் கூடிய கார்த்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது.

செவ்வாய்க்கிழமையில் கிருத்திகையும் சேரும் பொழுது பொதுவாக முருகனை வழிபடுவது சகல, சௌபாக்கியங்களையும் கொடுக்கும் என்பது சாஸ்திர நியதி. செவ்வாய்க் கிழமையில் கிருத்திகை நட்சத்திர வழிபாடு செய்பவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் வேண்டியபடியே கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இன்று வரை இருந்து வருகிறது. குறிப்பாக குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.

முருகனுடைய வேலுக்கு அபிஷேகம் செய்து சந்தன, குங்கும திலகம் இட வேண்டும். முருக மந்திரங்கள், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், மூல மந்திரங்கள் உச்சரித்து முருகனுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஆனி கிருத்திகை நன்னாளில் முருகனை வழிபடுபவர்களுக்கு சொந்த வீடு அமையும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் மற்றும் வேண்டிய வரங்கள் எல்லாம் வேண்டியபடியே உடனே கிடைக்கும்.

பழனி முருகன் கோவில்: திங்கள் முதல் பக்தர்களுக்கு அனுமதி- 1மணிநேரத்தில் 1,000 பேர் தரிசனம் செய்யலாம்! பழனி முருகன் கோவில்: திங்கள் முதல் பக்தர்களுக்கு அனுமதி- 1மணிநேரத்தில் 1,000 பேர் தரிசனம் செய்யலாம்!

ஆனி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை தொட்டி இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

Aani Krithigai: Worship of Tamil Kadavul Lord Murugan who gives yogam to ones own home

உற்சவர், சண்முகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் காட்சி தருகிறார். கொரோனா பெருந்தொள்று காரணத்தால் 60 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திருக்கோயில்கள் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட நிலையில், ஆனி கிருத்திகை யொட்டி ஏராளமான பக்தர்கள் காலை முதலே மலைக்கோவிலில் குவிந்தனர்.

மலைக்கோயில் தேர் வீதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இலவச தரிசனம், ரூ. 150 சிறப்பு தரிசன வழிகளில் ஏராளமான பக்தர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து சுமார் 4 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

Aani Krithigai: Worship of Tamil Kadavul Lord Murugan who gives yogam to ones own home

இரண்டு மாதங்களுக்குப் பிறகு திருத்தணி மலை கோவிலில் பக்தர்கள் குவிந்து அரோகரா முழக்கங்களுடன் முருகன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டு வருவதால், மலைக்கோயில் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும், திருக்கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் பரஞ்சோதி கோயில் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

English summary

Aani Karthigai natchatram will have her own house for those who worship Murugan. Couples who are not blessed with a son will be looking for good news to cool their minds. All the gifts you need will be available immediately. Devotees gathered at Thiruthani on the eve of Anne’s birthday and chanted Arogara to pay homage to Lord Murugan.

Story first published: Tuesday, July 6, 2021, 13:38 [IST]

Source link

Leave a Reply