இரக்க குணமும் அன்பும் கொண்டவர்கள் – எந்த திதியில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா | Astrology : Child Born on Thiruthiya tithi Effects, Impact

Astrology

oi-Jeyalakshmi C

|

சென்னை: நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் திறமை படைத்தவர்கள் திருதியை திதியில் பிறந்தவர்களாக இருப்பார்கள். எந்த திதியில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பார்கள், யார் அன்பும் இரக்க குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள் இறைவனுக்கு என்ன படையல் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

சந்திரனின் நகர்வைப் பொறுத்து திதிகள் கணக்கிடப்படுகின்றன. வளர்பிறையில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன. வளர்பிறை, தேய்பிறை என திதிகளில் பிறந்தவர்களின் குணாதியங்களை அறிந்து கொள்வோம்.

பிரதமையில் பிறந்தவர்கள், எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல் உடையவர்கள். பிரதமை அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு நெய் படைத்து வழிபடவேண்டும்.

துவிதியையில் பிறந்தவர்கள், உண்மையை பேசுபவர்கள். பொய் பேச மாட்டார்கள். துவிதியை அன்று பிறந்தவர்கள் சர்க்கரை படைத்து வழிபடவேண்டும்

திருதியையில் பிறந்தவர்கள், தான் நினைக்கும் காரியத்தை செய்து முடிப்பவர்கள். சதுர்த்தியில் பிறந்தவர்கள், மந்திர சக்தியில் விருப்பம் உடையவர்கள். திருதியை அன்று பிறந்தவர்கள் பால் படைத்து வழிபடவேண்டும்

பஞ்சமியில் பிறந்தவர்கள், பொன் ஆசை உடையவர்கள். பஞ்சமி அன்று பிறந்தவர்கள் அம்மனுக்கு வாழைப் பழம் படைத்து வழிபடவேண்டும். சதுர்த்தி அன்று பிறந்தவர்கள் பட்சணம் படைத்து வழிபடவேண்டும்

சஷ்டியில் பிறந்தவர்கள், செல்வர் ஆக விருப்பப்படுவார்கள். சஷ்டி அன்று பிறந்தவர்கள் முருகனுக்கு தேன் படைத்து வழிபடவேண்டும்

சப்தமியில் பிறந்தவர்கள், மற்றவர்களின் மேல் இரக்க குணம் உடையவர்கள்.சப்தமி அன்று பிறந்தவர்கள் சூரியனுக்கு ஞாயிறன்று வெல்லம் படைத்து வழிபடவேண்டும்

அஷ்டமியில் பிறந்தவர்கள், குழந்தைகளிள் மேல் மிகவும் அன்பு உடையவர்கள். அஷ்டமி அன்று பிறந்தவர்கள் துர்க்கைக்கு தேங்காய் படைத்து வழிபடவேண்டும்.

நவமியில் பிறந்தவர்கள், அதிக புகழ் பெறுவதில் நாட்டம் உடையவர்கள். நவமி அன்று பிறந்தவர்கள் சிவனுக்கு நெற்பொறி படைத்து வழிபடவேண்டும்.

தசமியில் பிறந்தவர்கள், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். தசமி அன்று பிறந்தவர்கள் சனி பகவானுக்கு கருப்பு எள் படைத்து வழிபடவேண்டும்.

ஏகாதசியில் பிறந்தவர்கள், பொருள் ஈட்டுவதில் இவர்களின் எண்ணம் இருக்கும். ஏகாதசி அன்று பிறந்தவர்கள் பெருமாளுக்கு தயிர் படைத்து வழிபடவேண்டும்.

துவாதசியில் பிறந்தவர்கள், புதுமையான தொழில் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள். துவாதசி அன்று பிறந்தவர்கள் கிருஷ்ணருக்கு அவல் படைத்து வழிபடவேண்டும்.

திரயோதசியில் பிறந்தவர்கள், உறவினர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள் அமைதியான குணம் கொண்டவர்கள். திரயோதசி அன்று பிறந்தவர்கள் அம்மனுக்கு கடலை படைத்து வழிபடவேண்டும். சதுர்த்தசி அன்று பிறந்தவர்கள் விநாயகருக்கு சத்துமாவு படைத்து வழிபடவேண்டும்.

பௌர்ணமியில் பிறந்தவர்கள், தெளிவான சிந்தனை உடையவர்கள். அமாவாசையில் பிறந்தவர்கள், தன் அறிவை மேலும் பெருக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் உடையவர்களாக இருப்பர். பௌர்ணமி/ அமாவாசை அன்று பிறந்தவர்கள் அம்மனுக்குப் பாயசம் படைத்து வழிபடவேண்டும்.

English summary

Those who are capable of doing the thing they thought would be born in Tiruthi Tithi. Let’s see at what point people born will be bent on making money and who will be loving and compassionate.

Source link

Leave a Reply