உடலுறவு சிறப்பாக அமைய சில யோகாசனங்கள்சுரேஷ் வெங்கடாசலம்|Last Updated:
வெள்ளி, 29 ஜனவரி 2016 (21:26 IST)சிலவகை யோகாவை தொடர்ந்து செய்து வந்தால், மன அழுத்தம் குறைந்து, உடலில் ரத்த ஓட்டம் சீர் பெற்று உடல் வலிமையுடன் மனதில் உற்சாகம் ஏற்படும் என்றும் அது உடலுறவு சிறப்பாக அமைய துணைபுரியும் என்றும் கூறப்படுகிறது.


இதன் மூலம் உடலுறவில் ஈடுபடும் போதும் நல்ல பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. அதன்படி, சவாசனம் மற்றும் வஜ்ராசனம் ஆகியவை பெரிதும் துணைபுரியும் என்று கூறப்படுகிறது.


 


சாவாசனம் என்பது, உயிரற்ற உடல் எவ்வாறு சலனமின்றி இருக்குமோ அதைப் போல படுத்து, பார்வைகளை மேல் நோக்கி இருக்கமாறு அமைத்தலாகும்.


 


இந்த நிலையில், மூன்று நிமிடங்கள் வரை இருந்த பின்னர் பாதங்களை வலது இடதாக அசைத்து பின்னர் எழ வேண்டும். இந்த ஆசனம் செய்வதால் மன அழுத்தம நீங்கும்.


 


வஜ்ரம் என்றால் உறுதி என்று பொருள் எனவே வஜ்ராசனம் செய்தால் உடல் பலம் பெரும். அதன்படி, முதலில் இரண்டு கால்களையும் பின்புறமாக மடக்கி உட்காரவேண்டும்.


 


நமது பின்புறங்கள் இரண்டு கால்களின் மேல் இருக்குமாறு அமர வேண்டும். இடது காலின் கட்ட விரலில் வலது காலின் கட்ட விரலை வைத்து அமர வேண்டும். இதே நிலையில் 10 நிமிடம் முதல் 15 நிமிடங்கள் இருக்க வேண்டும்.


 


இவ்வாறு இரண்டு யோகாசனங்களை செய்வதால், மனஅழுத்தம் குறைந்து உடல் உறுதி பெறும். 


 


இதன் மூலம் உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதாக கூறப்படும் மனஅழுத்தம் குறைந்து உடலுறவு சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Reply