எலுமிச்சையை பயன்படுத்தி வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை போக்க !!Sasikala|


வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு, குடும்பத்தில் சண்டை, பணப்பிரச்சினைகள் இருக்குமெயானால், வீட்டில் எதிர்மறை சக்தி இருந்தால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.


பச்சை நிற எலுமிச்சையை பயன்படுத்தி வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை எளிதாக வெளியேற்றி விடலாம். மூன்று எலுமிச்சை பழங்களை வீட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைக்கவேண்டும். அதன் நிறம் எப்போது மஞ்சள் அல்லது கருப்பாக மாறுகிறதோ அப்போது அதை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் புதிய எலுமிச்சை  வைக்க வேண்டும்.


 


மழைநீரில் எலுமிச்சையின் தோலினை போட்டு கொதிக்க வைத்து வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் நம்மை விட்டு அகலும் என  கருதப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் அல்லது மேஜையில் மூன்று எலுமிச்சைகளை வைத்து கொள்வது மிகவும் நல்லது.


 


வீட்டிற்கு வெளியே செல்லும் போது ஒரு எலுமிச்சையை கையில் எடுத்துக் கொண்டு செல்லவேண்டும். திரும்ப வீட்டிற்கு வந்ததும் எலுமிச்சையை எடுத்து பார்க்கவேண்டும். அது காய்ந்து இருந்தால் உங்களை நோக்கிய எதிர்மறை சக்தியை ஈர்த்துள்ளது என்று அர்த்தம்.


 


இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சையை நான்கு துண்டாக அறுத்து உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைக்கவேண்டும். கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு விடிந்ததும் கையால் தொடாமல் பிளாஸ்டி கவரில் உப்புடன் சேர்த்து தூக்கி எறிய வேண்டும். இதை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்தால் நல்ல மாற்றத்தை  நம்மால் உணர முடியும். 

Source link

Leave a Reply