சில யோகா முத்திரைகளால் மனம் சார்ந்த அழுக்குகளை நீக்க முடியுமா….?Sasikala|


மனோமய கோசத்தில் தேங்கி நிற்கும் எதிர்மறை எண்ணப் பதிவுகளே பெரும்பாலான நாள்பட்ட நோய்களுக்கு மூல காரணமாக உள்ளன.


நாம் பயன்படுத்தும் பெரும்பாலான தந்திர யோக முத்திரைகளும் மூன்று நிலைகளில் செயல்படுகின்றன. உடல் சார்ந்த நிலை, மனம், எண்ணம் சார்ந்த நிலை,  ஆன்மிக நிலை. 


 


ஒரு முத்திரையைச் செய்யத் துவங்கும்போது முதலில் அதன் பலன்களை நமது பருவுடலில் மட்டுமே உணரமுடியும். இதையே உடல் சார்ந்த நிலை செயல்பாடு  என்கிறோம்.


 


அதே முத்திரையை மேலும் பல வாரங்கள் அல்லது மாதங்கள் தொடர்ந்து செய்துவரும்போது, நமது எண்ணங்களிலும் உணர்வு நிலைகளிலும் பல மாற்றங்களை  உணரமுடியும். இதையே மனம் சார்ந்த நிலை செயல்பாடுகள் என்கிறோம்.


 


அதே முத்திரையை மேலும் தொடர்ந்து செய்துவந்தால் சக்தி உடல்களில் பல மாற்றங்கள் நிகழத் துவங்கும். மனமும் எண்ணங்களும் இரண்டாவது நிலையில் பண்பட்ட பின்னரே மூன்றாவது நிலையான ஆன்மிக நிலை செயல்பாடுகளை உணரமுடியும். இதுவே மூன்றாவது நிலையான ஆன்மிக நிலை செயல்பாடுகளாகும்.


 


“தூய்மைப்படுத்தும் முத்திரை’ என்பது நமது பருவுடலில் தேங்கி நிற்கும் கழிவுகளையும் நச்சுப் பொருட்களையும் அகற்றி, உடலைத் தூய்மைப்படுத்தும் ஒரு அற்புதமான முத்திரையாகும்.


 


இதே முத்திரையை நமது எண்ணங்களில் தேங்கி நிற்கும் கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்றவும் பயன்படுத்த முடியும்.


 


மனமும் எண்ணங்களும் சீராகும் போது அவற்றோடு தொடர்புடைய மனோமய கோசமும் விஞ்ஞானமய கோசமும் சீராகும். மனோமய கோசத்தில் தேங்கி நிற்கும் எதிர்மறை எண்ணப்பதிவுகள் அனைத்தும் அகன்றுபோகும். அவற்றால் உருவான நோய்களும் மறைந்து போகும்.

Source link

Leave a Reply