திருமண தடை ஏற்படுத்தும் களத்திர தோஷம்… இந்த பரிகாரம் செய்தால் கெட்டிமேளம் கொட்டும் | Kalathra dosham pariharam in tamil : astrology remedies for delay marriage problem

News

oi-Jeyalakshmi C

|

சென்னை: வருடக்கணக்கில் வரன் பார்த்தும் சிலருக்கு திருமணம் நடைபெறாது. ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும் திருமணம் நடைபெறுவதில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். களத்திர தோஷம், பாப கர்த்தாரி தோஷம், சுக்கிர தோஷம், சூரிய தோஷம், செவ்வாய் தோஷம், பித்ரு என எண்ணற்ற தோஷங்கள் திருமண தடையை ஏற்படுத்துகின்றன. நம்முடைய ஜாதகத்தில் என்னென்ன தோஷம் இருக்கிறது என்று கண்டறிந்து அதற்கேற்ப பரிகாரம் செய்தால் மட்டுமே தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.

ஆணோ பெண்ணோ திருமணம் ஒருவரின் வாழ்க்கையை முழுமையாக்குகிறது. இளம் வயதில் திருமணம் நடைபெறுவது சிலருக்கு மட்டுமே கொடுப்பினை. சிலரோ கோவில் கோவிலாக சென்று பரிகாரம் செய்து வருவார்கள். நல்ல வரன் கிடைக்க வேண்டும் என்று தெய்வங்களை வேண்டிக்கொள்வார்கள். ஜாதகத்தில் தோஷம் இருந்தால் திருமணம் செய்ய அவசரப்படக்கூடாது. அப்படி அவசரப்பட்டு திருமணம் செய்தால் மணமுறிவு ஏற்படும். சிலருக்கு திருமண வாழ்க்கையே நரகமாகிவிடும்.

9 முறை MLA... 5 முறை MP... 6 முறை முதலமைச்சர்... காங்கிரஸ் மூத்த தலைவர் வீர பத்ர சிங் காலமானார்..! 9 முறை MLA… 5 முறை MP… 6 முறை முதலமைச்சர்… காங்கிரஸ் மூத்த தலைவர் வீர பத்ர சிங் காலமானார்..!

ஒருவருக்கு நல்ல கணவனோ மனைவியோ அமைய குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானங்களில் சுப கிரகங்களின் கூட்டணி சேர்க்கை பார்வை முக்கியம். களத்திரகாரகன் களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டில் இருப்பது களத்திர தோஷம் ஆகும். களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானஅதிபதி கன்னி ராசியில் நீச்சம் பெற்று அமர்வது தோஷத்தை ஏற்படுத்தும். களத்திர பாவத்திற்கு அல்லது களத்திர ஸ்தான அதிபதிக்கு அல்லது சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோஷம் ஏற்படும்.

களத்திர தோஷம்

களத்திர தோஷம்

பொதுவாக சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோஷத்தை ஏற்படுத்தும். இதை புனர்ப்பு தோஷம் என்றும் சொல்வார்கள். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு தாமதமான திருமணம் ஏற்படும். திருமணம் நடந்தாலும் சற்று சன்னியாச வாழ்க்கை தான்.

களத்திர தோஷம்

களத்திர தோஷம்

ஒருவருக்கு நல்ல கணவனோ மனைவியோ அமைய குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானங்களில் சுப கிரகங்களின் கூட்டணி சேர்க்கை பார்வை முக்கியம். களத்திரகாரகன் களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டில் இருப்பது களத்திர தோஷம் ஆகும். ஜாதகத்தில் ஏழாம் இடமான களத்திர பாவத்திற்கு அல்லது களத்திர ஸ்தான அதிபதிக்கு அல்லது சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோஷம் ஏற்படும். எந்த ஒரு கிரகங்களாயிருந்தாலும் கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்தால் பலம் வாய்ந்தவர்களாகி விடுவார்கள்.

குடும்பத்தில் பிரச்சினை

குடும்பத்தில் பிரச்சினை

ஒருவருடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதியாகிய இரண்டாம் வீட்டின் அதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி எனும் ஏழாம் வீட்டின் அதிபதிகள் உச்சம் பெறுவது மற்றும் செவ்வாய், ராகு சேர்க்கை பெறுவது மற்றும் ஏழாம் வீட்டை உச்சம் பெற்ற கிரகங்கள் பார்ப்பது தோஷமாகும்.

ராகு கேது சர்ப்ப கிரகங்கள்

ராகு கேது சர்ப்ப கிரகங்கள்

ஒருவருடையை ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதியாகிய இரண்டாம் வீட்டின் அதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி எனும் ஏழாம் வீட்டின் அதிபதிகள் நீசம், வக்ரம் பெற்றும் நின்று அசுபர்கள் தொடர்பு பெறுவது. இரண்டாம் வீட்டிலோ அல்லது ஏழாம் வீட்டிலோ எந்த ஒரு கிரகங்களாவது உச்சம் பெற்று நின்று செவ்வாய், ராகு தொடர்பு பெறுவது திருமண தடையை ஏற்படுத்தும்.

தோஷம் நிவர்த்தி எப்படி

தோஷம் நிவர்த்தி எப்படி

மாங்கல்ய தோஷம், பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். பெண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 8ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானம். இதில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. 8 ஆம் இடத்தில் மேலே சொன்ன 5 கிரகங்கள் இருந்து, அந்த இடம் அக்கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் தோஷம் குறையும். அவ்வீட்டில் குரு, சுக்கிரன் பார்வை இருந்தால் தோஷம் விலகும்.
மாங்கல்ய தோஷம் இருந்தால் புகுந்த வீட்டில் கணவனுக்கு அல்லது மாமனார், மாமியாருக்கு பாதிப்புகள் ஏற்படலாம். சுமங்கலியாக இறந்த பெண்ணுக்கு வருடாவருடம் சுமங்கலி பூஜை செய்யாமல் இருந்தால் இந்த தோஷம் ஏற்படும்.

நாக தோஷ அமைப்பு

நாக தோஷ அமைப்பு

ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும் லக்னம் இருக்கும் இடங்களிலிருந்து, 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும். இரண்டாம் இடமான தனம், வாக்கு ஆகியவை குடும்பஸ்தானத்தில் இருந்தால் திருமண தோஷத்தைத் தருவார்கள். ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்தால், களஸ்திர தோஷத்தைத் தருவார்கள். பெண்கள் ஜாதகத்தில் எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தில் இருந்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும். ஐந்தாம் இடமான புத்திரஸ்தானத்தில் இருந்தால் புத்திர தோஷத்தைத் தருவார்கள்.

பித்ரு தோஷம்

பித்ரு தோஷம்

பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறாது. தாமதமாக திருமணம் நடைபெறும். அப்படியே திருமணம் நடைபெற்றாலும் விவாகரத்து ஏற்படும். தம்பதியரிடையே அந்நியோன்னியம் ஏற்படாது. பிரச்சினைகள் சண்டைகள் ஏற்படும். மனநோய் வரும். புத்திபாக்கியத்தில் தடை ஏற்படும். சிலருக்கு கலப்பு திருமணம் ஏற்படும். பித்ரு தோஷம் உள்ளவர்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அமாவாசை நாட்களிலும் மகாளய பட்ச நாட்களிலும் ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு சென்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க பாதிப்புகள் நீங்கும்.

English summary

Delay marriage Dhosham astrology remedies. Kalathra dosham , Pitra Dosha is also a factor for delayed marriage. Astrological factors for delayed marriage and Kalathira dosham for remedies

Story first published: Thursday, July 8, 2021, 16:03 [IST]

Source link

Leave a Reply