நவக்கிரக குரு மற்றும் தட்சிணாமூர்த்தி குரு வேறு… எவ்வாறு..?Sasikala|


நவக்கிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. குருவருள் வேண்டி பரிகாரம் செய்ய விரும்புபவர்கள், வியாழக்கிழமைகளில் வியாழ  பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம். 


கொண்டைக் கடலை நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்யலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாய் நெய் விளக்கு  ஏற்றியும் வழிபடலாம்.


 


குருவருள் வேண்டி பரிகாரம் செய்ய விரும்புபவர்கள், வியாழக்கிழமைகளில் வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக் கடலை மாலை  அணிவித்தும் வழிபடலாம். கொண்டைக் கடலை நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்யலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்கு  முகமாய் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.


 


சிவன் கோவிலில், சிவனுக்கு வலதுபுறம் தெற்கு பார்த்த வண்ணம்  இருக்கும் தெய்வம் தட்சிணாமூர்த்தி. அவரையும் குரு என்பார்கள். நவக்கிரக சந்நிதியில் வியாழனுக்கு (குரு)அபிஷேக பூஜை செய்யலாம். குருவின் அதிதேவதை தட்சிணாமூர்த்தி என்பதால் அவருக்கும் பூஜை செய்யலாம்.

Guru


குரு பகவானுக்கு செய்த அர்ச்சனை பொருளாகிய தேங்காய் ,பழம்  முதலியவற்றை  கோவிலேயே தானம் செய்து விட வேண்டும். ஆனால் தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்யும் பிரசாதங்களை வீ ட்டிற்கு கொண்டு வரலாம். நவக்கிரகங்கள் படத்தை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது. ஆனால் தட்சிணா மூர்த்தியை  வீட்டில் வைத்து வணங்கலாம்.

Source link

Leave a Reply