நாடி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

நாடி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

நாடிப் பொருத்தம் என்பது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் உள்ள ரத்த ஒற்றுமையை பற்றி கூறும் பொருத்தமாகும் நாடிப் பொருத்தம் அமைந்தால் புத்திர பாக்கியம் உறுதியாக அமையும் நாடிப்பொருத்தம் மூன்று பிரிவாக பிரிக்கப்படுகின்றது பார்சுவ எனப்படும் வாத நாடி: அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள்
நாடி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham
நாடி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham
மத்தியா நாடி எனப்படும் பித்த நாடி: பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் சமான நாடி அதாவது சிலேத்தும நாடி: கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மேலும் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே நாடியாக இருந்தால் பொருத்தம் கிடையாது
நாடி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham
நாடி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham
ஆண் மற்றும் பெண் இருவருக்கும் வெவ்வேறு நாடியாக இருந்தால் பொருத்தம் உண்டு ஆண் மற்றும் பெண் இருவரின் உடல்நிலை சூடு உடம்பாக இருந்தால் குழந்தை பாக்கியம் பிரச்சனை உள்ளது கணவன் மனைவி நடத்தும் குடும்ப வாழ்க்கை காரணமாக உடலில் நோய்நொடிகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ இந்த பொருத்தம் தேவை. உடலில் உள்ள சத்துக்கள், ரத்தம், சூடு, குளிர்ச்சி, போன்ற விசயங்களை கொண்டது
மேலும் திருமணத்திற்கு தேவையான அடிப்படை பொருத்தங்களை பற்றி கேழே கொடுக்கப்பட்டது
திருமணத்தடை உள்ளவரா ! நீங்கள் எனில் உங்களுக்காக சில குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறவும்
திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற ஒரு ஆன்மிக வழிமுறை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி திருமண மந்திரத்தை கூறி தியானம் செய்தால் எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் எளிதில் தடை நீங்கி திருமணத்திற்கு வழி வகுக்கும்
திருமண மந்திரம்
திருமண மந்திரம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை  மனதிற்குள் சொல்லிக்கொண்டே இறைவனை நினைத்து தியானம் செய்தால் திருமண தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும்  என்று சில மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

————–வாழ்க வளமுடன்  திருமண சுபமஸ்து ————–

4 COMMENTS

  1. […] நாடிப் பொருத்தம் – குழந்தை பாக்கியம் […]

  2. […] நாடிப் பொருத்தம் […]

  3. ராசி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

    […] நாடிப் பொருத்தம் […]

  4. தினப்பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

    […] நாடிப் பொருத்தம் […]

Leave a Reply