நோயை விரட்டும் யோக முத்திரைகளை தினமும் செய்தால்…Sasikala|

யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும்  அதிகரிக்கும். யோகாவில் ஒரு அம்சம் முத்திரைகள். கை விரல்களால் செய்வது முத்திரைகள்.


 


நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல்  உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் உண்டாக்கப்பட்டது. நம் உடலும் பஞ்ச பூதங்கள் அடங்கியதுதான். நம் கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூதத்தை குறிப்பதாக உள்ளது.


 


1. கட்டை விரல் – நெருப்பையும், 


2. ஆள்காட்டி விரல் – காற்றையும், 


3. நடுவிரல் – வானத்தையும், 


4. மோதிர விரல் – நிலத்தையும், 


5. சிறு விரல் – நீரையும் குறிக்கின்றன. 


 


இந்த பஞ்ச பூதங்கள் சம நிலையில் இருக்கும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.


 


இந்த முத்திரைகளை உட்கார்ந்திருக்கும் போதோ, நிற்கும்போதோ, நடக்கும்போதோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனத்தில்  அமர்ந்து செய்வது அதிக நன்மை அளிக்கும். தினந்தோறும் 10 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன்  கிடைக்கும்.

Source link

Leave a Reply