பூஜை அறைகள் அமைத்து கொள்வதற்கான வாஸ்து முறைகள் !!Sasikala|


வீடு வியாபார ஸ்தலம் தொழிற்கூடம் இவை அனைத்திலும் எல்லா பாகத்து அறையிலும் பூஜை அறைகள் அமைத்துக் கொள்ளலாம். சுவாமிகள் படம் கிழக்குப் பார்த்து அமைக்க வேண்டும். 


சுவாமியின் படத்திற்கு இடது பாகத்தில் விளக்கு வைக்க வேண்டும். வீடாக இருந்தாலும் வியாபார ஸ்தலமாக இருந்தாலும் தொழிற்கூடமாக இருந்தாலும் மாலை 5.45 க்கு மேல் சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றி 45 நிமிடங்கள் பாதுகாப்பாக தீபம் எரியும் வண்ணம் தினசரி வழிபட மஹாலட்சுமி யோகம் அமையும்.


 


எந்த கட்டிடமாக இருந்தாலும் புதுமனை புகும் போது கண்டிப்பாக கணபதி ஹோமம் செய்ய வேண்டும். பின்பு அதே மாதத்தில் ஆண்டுக்கொருமுறை கணபதி ஹோமம் செய்து வர பலவித யோகங்களை பெறலாம்.


 


புதிய வீடு கட்டுபவர்கள் வாஸ்து விதிமுறைகளை அப்படியே பயன்படுத்தி 100% வாஸ்து பலமுள்ள வீட்டை அமைத்துக்கொள்ளலாம். பழைய வீட்டில் உள்ளவர்கள் இதில் படி மாற்றம் செய்து கொள்ளலாம்.

Source link

Leave a Reply