பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் அருளும் கிரஹ அமைப்புகள்கணவனின் ஆயுள் நிலைக்கவும் மனைவியின் மாங்கல்யம் நிலைப்பதற்காகவும் குருவின் அருள் நிறைந்த திருமாங்கல்யம் அணியப்படுகிறது.

1.ஜோதிடத்தில் புனிதமான விஷயங்களுக்கெல்லாம் குரு பகவான் தான் காரகராவார். குருபகவானை குறிக்கும் விதமாக தான் திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றில் தங்கத்தில் செய்யப்படுகிறது. வேதம் ஓதும் அந்தணர்களுக்கும் காரகர் குருபகவானே ஆகும். கணவனின் ஆயுள் நிலைக்கவும் மனைவியின் மங்கலத்தன்மை நிலைப்பதற்க்காகவும் குருவின் அருள் நிறைந்த திருமாங்கல்யம் அணியப்படுகிறது.

2.கணவன் மனைவி இருவர் ஜாதகத்திலும் லக்னம் பலம் பெற்று மனைவியை குறிக்கும் சுக்கிரனும் கணவனை குறிக்கும் மங்களன் எனும் செவ்வாயும் நல்ல நிலையில் ஆட்சி உச்சம் மூல திரிகோன பலம் மற்றும் திக் பலம் பெற்று இருக்க வேண்டும்.

3.பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் ஏழாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்க கூடாது. ஏழாமிடம் சுத்தம் நன்மை பயக்கும். மேலும் ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் அசுபர்களுடன் சேர்ந்து லக்னம்,குடும்பம்,சுகம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம், அயன சயன சுகம் ஆகிய வீடுகளில் தொடர்பு பெறகூடாது.

4. லக்னம், குடும்பம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம் (1,2,7,8) ஸர்ப கிரஹங்களான ராகு கேது தொடர்பு கொள்ள கூடாது.

5.பலமிழந்த நீச சந்திரன் 68 வீடுகளில் தொடர்பு பெறாமல் இருக்க வேண்டும்.

6.அசுப கிரகங்கள் உச்சம் பெற்று எட்டாமிடத்தில் நிற்க கூடாது.

7. செவ்வாயும் ராகுவும் அல்லது செவ்வாயும் சனியும் சேர்க்கை பெற்று 78ம் வீடுகளில் நிற்க்க கூடாது.

8. இரண்டு மற்றும் ஏழாமிடங்கள் மற்றும் அதன் அதிபதியோடு உச்ச கிரஹ தொடர்புகள் இருக்க கூடாது.

இவற்றோடு ரஜ்ஜு பொருத்தம் இருக்க வேண்டும்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply