மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜைகணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவிமார்கள் பல பூஜைகள் செய்வதுண்டு. மனைவிக்கு ஆயுள் பலன் அதிகரிக்க கணவன் மார்களும் சில பூஜைகளை செய்யலாம். அதில் ஒன்றை இந்த பதிவில் பார்ப்போம்.

நமது கலாச்சாரத்தில் பொதுவாக கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவிமார்கள் பல பூஜைகள் செய்வதும், விரதங்கள் இருப்பதும் வழக்கம். அதுபோல மனைவிக்கு ஆயுள் பலன் அதிகரிக்க கணவன் மார்களும் சில பூஜைகளை செய்யலாம். அதில் ஒன்றை இந்த பதிவில் பார்ப்போம்.

தன் அங்கத்தில் சரிபாதியை தேவி பார்வதிக்கு அளித்தவர் சிவ பெருமான். திங்கட்கிழமை அன்று கணவன்மார்கள் சிவனை நினைத்து விரதம் இருந்து பின் சிவனுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் மனைவியின் ஆயுள் பலம் கூடும். இதை மனைவி செய்தால் கணவனின் ஆயுள் பலம் கூடும்.

பொதுவாகவே திருமணத்தன்று மணமக்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டும் என்பதற்காக ஹோமம் வளர்ப்பது வழக்கம். அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக விளங்குகிறது சிவனுக்கு இருக்கும் விரதம்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply