யோகா நிபுணர் பி.கே.எஸ்.அய்யங்கார் காலமானார் | Webdunia TamilAnnakannan|Last Modified புதன், 20 ஆகஸ்ட் 2014 (15:46 IST)
இந்திய யோகா கலையை உலகம் முழுவதிலும் பரவச் செய்ய அருந்தொண்டாற்றிய, பத்ம விபூஷன் விருது பெற்ற யோகா நிபுணர் பி.கே.எஸ்.அய்யங்கார், புனேவில் இன்று (20.08.2014) அதிகாலை காலமானார்.


யோகா கலை தொடர்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், பயிற்சி நெறிகளை எழுதி வெளியிட்டுள்ள பி.கே.எஸ்.அய்யங்காருக்கு உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான சீடர்கள் உள்ளனர்.


இத்துறையில் சிறப்பாகத் தொண்டாற்றியமைக்காக இந்திய மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதை அவர் பெற்றிருந்தார்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் வாழ்ந்து வந்த அவர், தனது 96ஆவது வயதில் இன்று புனேவில் உயிரிழந்தார்.


அண்மைக் காலமாக சுவாசக் கோளாறு, மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி, இயற்கை எய்தினார்.

Source link

Leave a Reply