யோனி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

யோனிப் பொருத்தம் | யோனி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

யோனி பொருத்தம் இருந்தால் திருமண வாழ்விற்கு பிறகு வாழ்க்கை சுகமாகும் மிகவும் சந்தோஷமாகவும் அமையும் யோனிப் பொருத்தம் என்பது திருமணத்திற்கு பிறகு ஆண் மற்றும் பெண் இருவரின் தாம்பத்திய உடலமைப்பைப் பற்றி கூறுகிறது யோனிப் பொருத்தம்  இருந்தால் இல்லறம் என்னும் தாம்பத்யமும் உடலுறவும் சிறப்பாக அமையும் யோனிப பொருத்தம் இல்லை என்றால் திருமண வாழ்விற்கு பிறகு இவர்களின் தாம்பத்திய வாழ்க்கை இனிமையாக அமையாது  என்று சில ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன யோனி பொருத்தம் என்பது பிறப்பு ஜாதகத்தில் உள்ள 27 நட்சத்திரங்களுக்கு உள்ள மிருகங்களை குறிக்கக் கூடியது ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு மிருகங்களை கொண்டது இவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பொருத்தம் கணிக்கப்படுகிறது "<yoastmark
யோனிப்பொருத்தம் கணிக்கும் முறை
ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பகைமை இல்லாத யோனி இருந்தால் பொருத்தம் உண்டு ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பகைமை உள்ள யோனி என்றால் பொருத்தம் இல்லை
 • அசுவினி – ஆண் குதிரை
 • பரணி – ஆண் யானை
 • கார்த்திகை – பெண் ஆடு
 • ரோகிணி – ஆண் நாகம்
 • மிருகசீரிஷம் – பெண் சாரை
 • திருவாதிரை – ஆண் நாய்
 • புனர்பூசம் – பெண் யானை
 • பூசம் – ஆண் ஆடு
 • ஆயில்யம் – ஆண் பூனை
 • மகம் – ஆண் எலி
 • பூரம் – பெண் எலி
 • உத்தரம் – எருது
 • அஸ்தம் – பெண் எருமை
 • சித்திரை – ஆண் புலி
 • சுவாதி – ஆண் எருமை
 • விசாகம் – பெண் புலி
 • அனுஷம் – பெண் மான்
 • கேட்டை – கலைமான்
 • மூலம் – பெண் நாய்
 • பூராடம் – ஆண் குரங்கு
 • உத்திராடம் – மலட்டு பசு
 • திருவோணம் – பெண் குரங்கு
 • அவிட்டம் – பெண் சிங்கம்
 • சதயம் – பெண் குதிரை
 • பூரட்டாதி – ஆண் சிங்கம்
 • உத்திரட்டாதி – பாற்பசு
 • ரேவதி – பெண் யானை
இவற்றில், பொருத்தம் இல்லாதவை
 • பாம்பு x கீரி
 • யானை x சிங்கம்
 • குரங்கு x ஆடு
 • மான் x நாய்
 • எலி x பூனை
 • குதிரை x எருமை
 • பசு x புலி"<yoastmark
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நட்சத்திரங்களுக்கு சரியான யோனி உள்ளது யோனிப் பொருத்தம் இல்லாதவர்களுக்கு இன்பங்கள் குறைவாகத்தான் கிடைக்கும் மேலும் திருமணத்திற்கு தேவையான அடிப்படை பொருத்தங்களை பற்றி கேழே கொடுக்கப்பட்டது
திருமணத்தடை உள்ளவரா ! நீங்கள் எனில் உங்களுக்காக சில குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறவும்
திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற ஒரு ஆன்மிக வழிமுறை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி திருமண மந்திரத்தை கூறி தியானம் செய்தால் எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் எளிதில் தடை நீங்கி திருமணத்திற்கு வழி வகுக்கும்
திருமண மந்திரம்
திருமண மந்திரம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை  மனதிற்குள் சொல்லிக்கொண்டே இறைவனை நினைத்து தியானம் செய்தால் திருமண தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும்  என்று சில மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

——————— வாழ்க வளமுடன்  திருமண சுபமஸ்து ———————–  

3 COMMENTS

 1. தினப்பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

  […] யோனி பொருத்தம் […]

 2. […] யோனி பொருத்தம் – தாம்பத்திய உறவு […]

 3. வசியப் பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

  […] யோனி பொருத்தம் […]

Leave a Reply