ரஜ்ஜிப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

ரஜ்ஜிப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

ரஜ்ஜிப் பொருத்தம் என்பது மாங்கல்ய பொருத்தத்தை குறிக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தங்களில் மிகவும் முக்கியமான பொருத்தம் ஆகும் ரஜ்ஜு பொருத்தம் பொருந்தவில்லை என்றால் திருமணம் செய்வதை தவிர்க்கவும் திருமண பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் பொருந்தி ரஜ்ஜு பொருத்தம் மட்டும் பொருந்தவில்லை என்றால் திருமணம் செய்வதைத் தவிர்க்கவும் ரஜ்ஜீ பொருத்தத்தை ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன சிரசு ரஜ்ஜு (தலை) உடைய நட்சத்திரங்கள்: மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவை சிரசு (தலை) ரஜ்ஜு கண்ட ரஜ்ஜு (கழுத்து) உடைய நட்சத்திரங்கள்: ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை – ஆரோஹனம் திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை – அவரோஹனம் உதர (வயிறு) ரஜ்ஜு உடைய நட்சத்திரங்கள்: கார்த்திகை, உத்தரம், உத்ராடம் ஆகியவை – ஆரோஹனம் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை – அவரோஹனம் ஊரு ரஜ்ஜு (தொடை) உடைய நட்சத்திரங்கள்: பரணி, பூரம், பூராடம் ஆகியவை – ஆரோஹனம் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை – அவரோஹனம் பாத ரஜ்ஜு (கால் பாதம்) உடைய நட்சத்திரங்கள்: அசுவினி, மகம், மூலம் ஆகியவை – ஆரோஹனம் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – அவரோஹனம்
ரஜ்ஜிப்பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham
ரஜ்ஜிப்பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham
ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே நட்சத்திரமாக இல்லாமல் இருந்தாள் பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள் ஒரே ரஜ்ஜுவில் ஆரோஹனம், அவரோஹனம் என இரு பிரிவுகள் உள்ளது. பெண் மற்றும் ஆண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம். அதாவது ஒருவருக்கு ஏறு முகம் மற்றவருக்கு இறங்குமுகமாக இருக்க வேண்டும் ஆனால் தலை ரஜ்ஜு – சிரசு ரஜ்ஜுயாக இருவருக்கும் இருந்தால் கண்டிப்பாக பொருத்தம் இல்லை. செவ்வாயின் மூன்று நட்சத்திரங்கள் மிருகசிரிஷம், சித்திரை, அவிட்டம் ஒருவருக்கொருவர் திருமணம் செய்ய கூடாது.
ரஜ்ஜிப்பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham
ரஜ்ஜிப்பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham
இதில்
 • சிரசு ரஜ்ஜு என்றால் – உயிர் போகும் நிலை
 • கண்ட ரஜ்ஜு என்றால் – பெண்ணுக்கு பாதிப்பு
 • வயிறு ரஜ்ஜு என்றால் – குழந்தை பாக்கியம் கிடைக்காது
 • தொடை ரஜ்ஜு என்றால் – செல்வம் நிலைக்காது. ஏழ்மை நிலை
 • பாத ரஜ்ஜு என்றால் – பிரிவு, ஆன்மீக பயணம் – சன்னியாசம் செல்லுதல்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருத்தங்களை தெளிவாக பார்த்து திருமணம் செய்வதா அல்லது செய்யாமல் இருப்பதா என்பதை முடிவு செய்து கொள்ளவும்
மேலும் திருமணத்திற்கு தேவையான அடிப்படை பொருத்தங்களை பற்றி கேழே கொடுக்கப்பட்டது
திருமணத்தடை உள்ளவரா ! நீங்கள் எனில் உங்களுக்காக சில குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறவும்
திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற ஒரு ஆன்மிக வழிமுறை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி திருமண மந்திரத்தை கூறி தியானம் செய்தால் எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் எளிதில் தடை நீங்கி திருமணத்திற்கு வழி வகுக்கும்
திருமண மந்திரம்
திருமண மந்திரம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை  மனதிற்குள் சொல்லிக்கொண்டே இறைவனை நினைத்து தியானம் செய்தால் திருமண தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும்  என்று சில மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

————–வாழ்க வளமுடன்  திருமண சுபமஸ்து ————–

2 COMMENTS

 1. பால் பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

  […] ரஜ்ஜிப்பொருத்தம் […]

 2. நாடி பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

  […] ரஜ்ஜிப்பொருத்தம் […]

Leave a Reply