ராகு கிரகத்தின் தீய தாக்கங்கள் விரைவாக குறைய பரிகாரங்கள் !!Sasikala|


வாரத்தில் செவ்வாய் கிழமை மட்டுமல்லாது அனைத்து கிழமைகளிலும் ராகு கால வேளையில் நவக்கிரக சந்நிதிக்கு சென்று ராகு பகவான் துர்க்கை அம்மன் அல்லது பைரவர் போன்ற தெய்வங்களுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் ராகு கிரகத்தின் தீய தாக்கங்கள் விரைவாக குறைவதோடு, உங்களின் வேண்டுதல்  விரைவாக நிறைவேற வழிவகுக்கும். 


இந்த வழிபாட்டை தினமும் வேலைக்கு செல்பவர்களால் செய்ய முடியாவிட்டாலும், அவர்களின் சார்பாக, அவர்களின் குடும்பத்தினர் எவரேனும் செய்யலாம். தற்காலங்களில் பலரும் வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஒரு மனிதருக்கு வெளிநாட்டு வாசத்தை கொடுக்கக் கூடிய சக்தி கொண்ட கிரகமாக ராகு பகவான் இருக்கிறார். 


 


ஜாதகத்தில் பாதகமான நிலையில் ராகு கிரகம் இருந்தாலும், செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் ராகுகால நேரத்தில், ராகு பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ராகு ஸ்தோத்திரம் அல்லது பைரவர் அஷ்டகம் துதித்து வழிபாடு செய்து வந்தால் நீங்கள் வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளில் விரைவில் வெற்றி  உண்டாகும்.


 

வாழ்வில் ராகு பகவானால் தீய பலன்கள் ஏற்படாமல் நற்பலன்கள் மட்டும் உண்டாக வருடத்திற்கு ஒரு முறை திருநாகேஸ்வரம், நாகர்கோவில் போன்ற ஊர்களில் இருக்கும் ராகு பரிகார கோவில்களுக்கு சென்று ராகு சாந்தி பூஜை அல்லது ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது நல்ல பலன்களைக்  கொடுக்கும்.

திருநாகேஸ்வரம் வரை செல்லமுடியாதவர்கள், சென்னை அருகே உள்ள குன்றத்தூரில் வீற்று அருள்பாலிக்கும் திருநாகேஸ்வரரை வணங்கலாம்.

Source link

Leave a Reply