3 தலைமுறை பாவங்கள் நீங்க செவ்வாய்க்கிழமைகளில் செய்ய வேண்டிய பரிகாரம்செய்த பாவங்கள் நீங்க முன்னேற்றத் தடையை அகற்ற, எதிர்மறை ஆற்றலை எதிர்த்துப் போராட யட்சினி வழிபாடு நமக்கு கை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக வாழ்க்கையில் குறிக்கோள் என்ற ஒன்று இருக்கும். அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை அவர்கள் செய்து கொண்டுதான் வருகின்றார்கள். ஆனாலும் வாழ்க்கையின் முன்னேற்றம் இருக்காது. கஷ்டப்பட்டும், வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுவதற்கு காரணம் நாம் செய்த பாவத்தோடு மட்டுமல்லாமல், நம் முன்னோர்கள் செய்த பாவமும் நம்மை தொடர்வது தான். பணம் சம்பாதிக்க வேண்டும். குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். சொந்த வீடு கட்ட வேண்டும்.

கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும். இப்படி பல குறிக்கோள்கள் நம் மனதில் இருந்தாலும், அதை ஏதோ ஒரு சக்தி தடுத்துக் கொண்டே வரும். நமக்கு முந்தைய தலைமுறையும் கஷ்டத்தில் தான் வாழ்ந்து இருக்கும். நாமும் கஷ்டத்தில் தான் வாழ்ந்திருப்போம். நம்முடைய அடுத்த தலைமுறையையும் நம்மால் முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு சூழ்நிலை நிலவும். இப்படி குடும்பத்தில் முன்னேற்ற தடை இருந்தால், அதற்கு ஆன்மீக ரீதியாக சுலபமான வழியில் என்ன செய்யலாம்?.

செய்த பாவங்கள் நீங்க முன்னேற்றத் தடையை அகற்ற, எதிர்மறை ஆற்றலை எதிர்த்துப் போராட யட்சினி வழிபாடு நமக்கு கை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த யட்சினி தேவியாக பட்டவள் ஒரு நல்ல தேவதை. கேட்ட வரங்களை கொடுப்பதில் இந்த யட்சினி தேவதைக்கு முதலிடம் என்று சொன்னால் அது மிகையாகாது. நம்மில் பலபேர் இந்த தேவதை வழிபாட்டினை பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டோம். கேட்ட வரங்களை அள்ளித் தரக்கூடிய இந்த யட்சினி தேவதை வழிபாட்டை நம் வீட்டில் இருந்தபடியே எப்படி செய்வது.

வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் யட்சினி தேவியை மனதார நினைத்து வீட்டில் பூஜை செய்ய வேண்டும். எப்போதும் போல பூஜை அறையை அலங்காரம் செய்து கொண்டு, உங்களுடைய வீட்டில் ஒரு சிறிய தாம்பூலத் தட்டில் மூன்று மண் அகல் விளக்குகளை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய், இரண்டாவது மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய், மூன்றாவது மண் அகல் விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி திரி போட்டு யட்சினி தேவியை நினைத்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

இந்த தீபம் செவ்வாய்க்கிழமை 6.00 மணியிலிருந்து 7.30 மணி வரை உங்களுடைய வீட்டில் ஒளிர வேண்டும். உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எது தேவையோ, அந்த வேண்டுதலை இந்த தீபம் ஒளிரும் சமயத்தில் யட்சினி தேவியிடம் முறையிட்டால், வேண்டுதல் நிச்சயமாக கூடிய விரைவில் நிறைவேறும். அதை கண்கூடாக காணலாம். உங்களுடைய குறிக்கோள்கள் சிறிய குறிக்கோள் எனில் 3 வாரங்களில் அது நிச்சயமாக நிறைவேறிவிடும். குறிக்கோள் கொஞ்சம் பெரியதாக இருக்கும் பட்சத்தில், அந்தக் குறிக்கோள் நிறைவேற தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வரவேண்டும்.

கூடவே செவ்வாய்க்கிழமைகளில் யட்சினி தேவியை மேற்சொன்னபடி முறையாக வழிபட்டு வரவேண்டும். உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு, நீங்கள் செய்த பாவமோ அல்லது உங்கள் முன்னோர்கள் செய்த பாவமோ தடையாக நின்றால் கூட, அந்த தடைகள் தகர்க்கப்பட்டு பாவ விமோசனம் கிடைக்கப்பெறும். வாழ்க்கையில் தோல்வியே இல்லாத முன்னேற்றம் உங்களை தேடி வரும்.  நம்பிக்கையோடு வழிபாடு செய்பவர்களுக்கு, யட்சினி தேவி வரங்களை வாரி தருவாள்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply